×

சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி 95.85% தேர்ச்சி

சங்கரன்கோவில்,மே 7: சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 506 மாணவிகள் எழுதினர். இதில் 485 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். மாணவி ஷீபா கரோலின் 558 மதிப்பெண்களும், மாணவி விஜய சந்திரிகா 551 மதிப்பெண்களும், மாணவி அன்பரசி 550 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் முத்துமாரியம்மாள், கணினி பயன்பாட்டில் அபிநய , கணக்கு பதிவியலில் ஷீபா கரோலின், வணிகவியலில் ஜாசிதா ஜப்ரின், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் சக்தி மீனாட்சி தேவி ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி 95.85% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sankarankovil Government Girls School ,Sankarankoil ,Sankarankoil Government Girls Higher Secondary School ,Sheeba Karol ,Vijay Chandrika ,Dinakaran ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்